search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மழைக்கு குடிக்க இதமான ஹாட் சாக்லேட்
    X

    மழைக்கு குடிக்க இதமான ஹாட் சாக்லேட்

    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த மழைக்கு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு குடிக்க சூப்பரான ஹாட் சாக்லேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - ஒரு கப்,
    கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பட்டைத் தூள் - ஒரு சிட்டிகை,
    சர்க்கரைத் தூள் - சிறிதளவு.



    செய்முறை :

    கால் கப் காய்ச்சிய பாலில் கோகோ பவுடரை நன்றாக கரைக்கவும்.

    மீதி பாலை அடுப்பில் வைத்து சூடானதும் கோகோ - பால் கரைசலை சேர்க்கவும்.

    அடுத்து இதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    சூடான சாக்லேட் பாலை பரிமாறும் கிளாஸில் மாற்றி, மேலே பட்டைத் தூள், சர்க்கரைத் தூள் தூவி பரிமாறவும்.

    சூப்பரான ஹாட் சாக்லேட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×