search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி
    X

    தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி

    வேலைக்கு, பள்ளிக்கு செல்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை பட்டாணி - அரை கப்,
    பச்சரிசி 2 கப்,
    தேங்காய்ப் பால் - 2 கப்,
    வெங்காயம் - 2
    தக்காளி - 6,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

    பட்டாணி நன்றாக வெந்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.

    புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

    சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×