search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மசாலா பாப்கார்ன் செய்வது எப்படி
    X

    மசாலா பாப்கார்ன் செய்வது எப்படி

    குழந்தைகளுக்கு பிடித்தமான மசாலா பாப்கார்னை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதன் செய்முறை விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மக்காச்சோளம் - அரை கப்,
    கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    தூள் உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    பாப்கார்ன் செய்வதற்கு என்றே காய்ந்த மக்காச்சோளம் கிடைக்கும். அதைத்தான் வாங்க வேண்டும்.

    அடிகனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து சூடானதும் கைப்பிடி அளவு மக்காச்சோளத்தைப் போட்டு மூடிவைக்கவும் (மேலே குமிழ் உள்ள மூடி). படபடவென்று சத்தம் கேட்க ஆரம்பிக்கும்.

    சோளம் பொரியும் சத்தம் அடங்கியதும் இறக்கிவிட வேண்டும். இதேபோல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பார்கார்ன் தயாரிக்கவும்.

    பட்டர் பாப்கார்ன் செய்வதானால் சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×