search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வேர்க்கடலை பூர்ணம் போளி செய்வது எப்படி
    X

    வேர்க்கடலை பூர்ணம் போளி செய்வது எப்படி

    பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வேர்க்கடலையை பூர்ணம் வைத்து சூப்பரான போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - 200 கிராம்,
    உருளைக் கிழங்கு - 2,
    கேரட் - 2,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    கொத்துமல்லி - சிறிதளவு,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 கப்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சை ஜூஸ் -  2 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் மூன்றையும் குழைய வேகவிட்டு ஆறியதும் நன்றாக மசித்து கொள்ளவும்.

    மசித்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு இத்துடன் பெருங்காயம், உப்பு, தனிமிளகாய்தூள், கொத்துமல்லி, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் அதில் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை போட்டு 3 நிமிடம் நன்றாக கலந்து ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    கோதுமை மாவு அல்லது மைதா மாவில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு தளர பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள்ளே ஒரு வேர்க்கடலை உருண்டையை வைத்து மூடிவிடவும்.

    பிறகு மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரின் மீது போளியாக தட்டி தவாவில் போட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சூப்பரான மசாலா வேர்க்கடலை போளி ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×