search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆப்பத்திற்கு சூப்பரான சைடிஷ் ஃபிஷ் மொய்லி
    X

    ஆப்பத்திற்கு சூப்பரான சைடிஷ் ஃபிஷ் மொய்லி

    மீனில் குழம்பு, வறுவல் மட்டுமே செய்து சாப்பிட்டவர்களுக்கு இன்று வித்தியாசமான சாதம், ஆப்பத்திற்கு சூப்பரான சைடிஷ் ஃபிஷ் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்(ஏதாவது ஒரு வகை) - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கீறிய பச்சை மிளகாய் - 5
    இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
    எலுமிச்சைசாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய்ப்பால் - தண்ணீர் சேர்க்காமல் எடுத்த முதல் பால் ஒரு கப்,
    சிறிதளவு தண்ணீர் சேர்த்து எடுத்த இரண்டாம் பால் - ஒரு கப்
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    * சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் எலுமிச்சைசாறு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு சேர்த்து வெடித்தவுடன் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வெந்தவுடன் அதனுடன், இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பால் சேர்த்து, பின்பு ஊறவைத்திருக்கும் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு சிறிது நேரம் வேகவைக்கவும்.

    * பின்னர் அடுப்பின் தீயைக் குறைத்து, முதலில் எடுத்த தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கிவிட்டு பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் வேகவிட்டு குழம்பு கொதி வந்ததும் இறக்கவும்.

    * சூப்பரான ஃபிஷ் மொய்லி ரெடி.

    * ஃபிஷ் மொய்லி, சாதம் மற்றும் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×