search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்
    X

    சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த வெஜிடபிள் புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புலாவ் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 2 கப்
    தனியாப் பொடி - 2 டீஸ்பூன்
    கரம் மசாலாபொடி - 1 டீஸ்பூன்
    சோம்பு - 2 டீஸ்பூன்
    தனி மிளகாய்ப் பொடி- தேவைகேற்ப
    உப்பு- தேவைகேற்ப
    கேரட் - 100 கிராம்
    குடைமிளகாய் -  சிறியது 1
    வெங்காயம் - 2
    பீன்ஸ் - 100 கிராம்
    உரித்த பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 3
    காலிபிளவர் - பாதி
    கொத்தமல்லி - சிறிதளவு.

    அரிசியுடன் தாளிக்க :

    ஏலக்காய் - 6
    பட்டை - 4
    கிராம்பு- 6
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    * கொத்தமல்லி, காலிபிளவர், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், கேரடை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    * பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்து கொள்ளவும்.

    * கு‌க்க‌ரி‌ல் வெண்ணெயை போட்டு லேசாக உருகியதும் சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். 1 : 2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும். அ‌ரி‌சியை உ‌தி‌ரியாக வேக வை‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், நிறம் மாறாமல் இருக்கும்.

    * .வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிபிளவர் போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் கேரட், பீன்ஸ் போட்டு, பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். காய்கறி கலவையை அதிகமா வதக்க கூடாது.

    * கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும்.

    * ஒரு அகன்ற பாத்திரத்தில் தயாராக இரு‌க்கு‌ம் சாதத்தையும், காய்கறிகளையும் போட்டு கலக்கவும்.

    * நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    * சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×