search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சைடிஷ் வாழைக்காய் பொடிமாஸ்
    X

    சூப்பரான சைடிஷ் வாழைக்காய் பொடிமாஸ்

    சாம்பார், ரசம், சாதத்துடன் சாப்பிட சூப்பரான சைடிஷ் இந்த வாழைக்காய் பொடிமாஸ். இன்று இந்த வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முற்றிய வாழைக்காய் - 3.

    வறுத்து அரைக்க :

    துவரம் பருப்பு - 1/2 கப்,
    பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 10.

    தாளிக்க :

    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 பிடி,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.



    செய்முறை :

    * வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * வாழைக்காயை இரண்டாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் வேகவிடவும் அல்லது தண்ணீரில் கொதிக்க விட்டு வேக விடவும்.

    * வாழைக்காய் குழைய வேக விட கூடாது. குழைந்தால் துருவ முடியாது. வெந்ததும் தோலை உரித்து துருவி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் துருவிய வாழைக்காய், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    * கடைசியாக அரைத்த மசாலா தூளை சேர்த்து நன்றாக கலந்து இறக்கி சாம்பார், ரசம், சாதத்துடன் பரிமாறவும்.

    * சூப்பரான சைடிஷ் வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×