search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவகோடா - வெள்ளரிக்காய் சாலட்
    X

    அவகோடா - வெள்ளரிக்காய் சாலட்

    தினமும் உணவில் சாலட் வகைகளை சேர்த்து கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். இன்று அவகோடா, வெள்ளரிக்காயை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2
    அவகோடா - 2
    வெங்காயம் - 2
    வெள்ளரிக்காய் - 1
    வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சம்பழம் - 1
    ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



    செய்முறை :

    அவகோடாவின் கொட்டையை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய அவகோடா, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன்
    [பாட்டி மசாலா] மிளகு தூள்
    , வினிகர், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக எலுமிச்சம் பழச்சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் ஊறவைத்து பரிமாறவும்.

    சூப்பரான அவகோடா - வெள்ளரிக்காய் சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×