search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான ஓட்ஸ் பழ கஞ்சி
    X

    சத்தான சுவையான ஓட்ஸ் பழ கஞ்சி

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஓட்ஸ் பழ கஞ்சியை செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள், பேரீச்சை, மாதுளை, வாழைப்பழம் சேர்ந்த கலவை - 2 கப்
    பால் - 2 கப்
    ஓட்ஸ் - கால் கப்
    சிட்டிகை - உப்பு
    தேன் - 2 மேசைக்கரண்டி
    உலர்ந்த திராட்சை - 3 மேசைக்கரண்டி.



    செய்முறை :

    பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாக கொதிக்கும்போது தீயை மிதமாக்கி ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும்.

    வெந்த ஓட்ஸை இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும்.

    கடைசியாக பழக்கலவைகள், திராட்சை தேன் சேர்த்து கலந்து கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

    பரிமாறும் போது தான் பழங்களை சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    சூப்பரான ஓட்ஸ் பழ கஞ்சி ரெடி.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழங்கள், வாழைப்பழங்களை நீக்கி விடவும்.   

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×