search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொழுப்பை கரைக்கும் வாழைத்தண்டு சூப்
    X

    கொழுப்பை கரைக்கும் வாழைத்தண்டு சூப்

    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து கொள்வது நல்லது. வாழைத்தண்டு சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு துண்டுகள் - ஒரு கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 4 பல்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    சோள மாவு கரைசல் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் வெங்காயம், பூண்டு, வாழைத்தண்டு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.

    பிறகு உப்பு, மிளகுத்தூள், சோளமாவு கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து பருகலாம்.

    உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×