search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆரோக்கியமான பனிவரகு கறிவேப்பிலை சாதம்
    X

    ஆரோக்கியமான பனிவரகு கறிவேப்பிலை சாதம்

    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகு அரிசி, கறிவேப்பிலை வைத்து சத்தான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு அரிசி - அரை கிலோ
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    சின்ன வெங்காயம் - 10
    பச்சைமிளகாய் - 2
    மிளகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :
     
    கடுகு - கால் டீஸ்பூன்
    உளுந்து - கால் டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    பனிவரகு அரிசியை உப்பு சேர்த்து உதிரியாக வடித்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    வடித்த பனிவரகு சாதத்தில் கலவையைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×