search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நாள்பட்ட சளியை குணமாக்கும் தூதுவளைக் குழம்பு
    X

    நாள்பட்ட சளியை குணமாக்கும் தூதுவளைக் குழம்பு

    ஆஸ்துமா, நாள்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டவருக்கு நலம் தரும் ஆரோக்கிய உணவு இந்த தூதுவளைக் குழம்பு. இதன் செய்முறை இப்போது பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பச்சரிசி - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 1,
    பெருங்காயம் - சிறிதளவு,
    புளி - சிறு நெல்லிக்காய் அளவு,
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்.

    தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

    தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×