search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கம்பு ஸ்டஃப்டு மசாலா கொழுக்கட்டை
    X

    கம்பு ஸ்டஃப்டு மசாலா கொழுக்கட்டை

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கம்பு ஸ்டஃப்டு மசாலா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - ஒரு கப்,  
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    வெங்காயம் -  ஒன்று
    இஞ்சி - பூண்டு விழுது -  அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - கால்  டீஸ்பூன்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும்போது கம்பு மாவை சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறி எடுத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து பிசைந்து சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும்.

    கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, கம்பு மாவு கலவையில் சிறிது  எடுத்து உருட்டி குழி செய்து அதன் நடுவில் மசாலா கலவை உருண்டையை வைத்து மூடவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    செய்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான கம்பு ஸ்டஃப்டு மசாலா கொழுக்கட்டை ரெடி.
    Next Story
    ×