search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு கொழுக்கட்டை
    X

    சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு கொழுக்கட்டை

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்தது கோதுமை மாவு கொழுக்கட்டை. இன்று இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - அரை கப்,  
    தேங்காய் துருவல் - 2 கப்,
    வெல்லம் - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    கோதுமை மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசையவும்.

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும்.

    பிசைந்து வைத்த கோதுமை மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, அதன் நடுவில் தேங்காய் பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டைகளை வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை மாவு கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×