search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்பு
    X

    வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்பு

    அஜீரணம், வயிற்று கோளாறு, செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சுக்கு குழம்பு மிகவும் நல்லது. இன்று இந்த சுக்கு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு - ஒரு சிறிய துண்டு,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,
    தக்காளி - 2,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    * தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * சின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    * சூப்பரான சுக்கு குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×