search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான டிபன் கேழ்வரகு வெஜிடபிள் ஆம்லெட்
    X

    சத்தான டிபன் கேழ்வரகு வெஜிடபிள் ஆம்லெட்

    சர்க்கரை நோயாளிகள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், டயட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற கேழ்வரகு வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்
    கோஸ் - சிறிய துண்டு,
    கேரட் - 1,
    பீன்ஸ் - 50 கிராம், (எல்லா காய்கறிகளும் சேர்த்து 1 கப் வரவேண்டும்)
    ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 5 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    பச்சைமிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை



    செய்முறை :

    * கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * 4 கப் நீரை கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து காய்கறி, பட்டாணி, பச்சைமிளகாய் போட்டு பாதியளவு வெந்ததும் அதில் கேழ்வரகு மாவை சேர்த்து கிளறவும்.

    * எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு இறக்கவும்.

    * கிளறிய மாவு வெந்ததும் விருப்பமான சைஸில் உருண்டைகளாக உருட்டி ஆம்லெட்டாகத் தட்டி கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தட்டி வைத்த ஆம்லெட்டை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றி எடுக்கவும்.

    * கொத்துமல்லித் தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    * கேழ்வரகு வெஜிடபிள் ஆம்லெட் ரெடி.

    * இந்த ராகி வெஜ் ஆம்லெட் ஆறிய பின்பும் கூட சுவைக்க ஏற்றது. இதற்கு சைட் டிஷ் எதுவுமே தேவையில்லை. ஆனியன் ராய்த்தா, தக்காளி சட்னி தொட்டு சாப்பிட்டால், மேலும் சுவையாக இருக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் கூட மிகவும் ஏற்றது.   

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×