search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை
    X

    சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை

    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் கேழ்வரகில் அம்மினி கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிது

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை சிறிது சிறிதாக ராகி மாவில் ஊற்றி மரக்கரண்டி அல்லது மர ஸ்பூனால் கட்டி விழாமல் கிளறவும். இதை மூடி போட்டு ஐந்து நிமிடம் தனியாக வைக்கவும். பின்பு கைகளில் எண்ணெய் தடவிகொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    * அடுப்பில் இட்லி குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டை வைத்து துணி விரித்து, உருட்டிய கேழ்வரகு உருண்டைகளை தட்டில் வைத்து மூடி போட்டு, பத்து நிமிடம் வேக விடவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

    * அடுத்து அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது வதக்கி, பெருங்காயத்தூள், வேகவைத்த கொழுக்கட்டை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மெதுவாகப் புரட்டி இரண்டு நிமிடம் வதக்கவும்.

    * அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    * சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×