search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்
    X

    இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்

    இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று கறிவேப்பிலை மிளகு சாதம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - ஒரு கப் + தாளிக்க
    மிளகு - 2 டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு,
    கடுகு - அரை டீஸ்பூன்
    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    கல் உப்பு - தேவையான அளவு,



    செய்முறை :

    * வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.

    * அடுத்து கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.

    * பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.

    * அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

    * அனைத்தும ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.

    * வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சாதத்தை சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    * கறிவேப்பிலை மிளகு சாதம் ரெடி.

    * இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×