search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேனின் மருத்துவ குணம்
    X

    தேனின் மருத்துவ குணம்

    தேன் ஒரு நல்ல மருத்துவ உணவு. இதில் குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளன.
    தேன் ஒரு நல்ல மருத்துவ உணவு. இதில் குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளன. தேனீக்கள் மலரில் இருந்து கொண்டு வரும் தேன் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர் இருக்கும்.

    தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் உள்ள தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாக இருக்கும்.

    தேன் கலோரி ஆற்றல் மிகுந்த ஒரு உணவாகும். நீர்ம நிலையில் உள்ள தேன் கெட்டுப்போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச்சத்து நுண்ணுயிர்களை வளர விடுவது இல்லை. பதப்படுத்தாத தேனில் 14 முதல் 18 சதவீதம் வரை ஈரத்தன்மை இருக்கும். காயங்களில் தேனை தடவுவதால் அவை விரைவில் குணமடையும். தேனின் தனிப்பட்ட குணங்கள், ரசாயன பண்புகள் அவற்றை நீண்டகாலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன.

    ஈரமான காற்று தேனின் மீது படும்போது, அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து, தேனை நீர்த்து போகச் செய்து, இறுதியில் நொதித்தலாக்கிவிடும். அதனால் தேனை சூடாக்கி கரைத்தும் பயன்படுத்தலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் தேனை உணவாகக் கொடுக்கவேண்டும்.

    தேனில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒருவித மகரந்த தூள்கள் உள்ளதால், அதனை ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். சித்த மருத்துவத்தில் தேன் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனா, துருக்கி, உக்ரைன் போன்ற நாடுகள் தேன் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன.
    Next Story
    ×