search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தியே
    X

    பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தியே

    பிளாஸ்டிக் அரிசி என்பது எந்த லாஜிக்கும் இல்லாத வெற்று வதந்திதான். பிளாஸ்டிக்கால் அரிசியைத் தயார் செய்ய முடியும் என்பதற்கு எந்த அறிவுப்பூர்வமான காரணமும் இல்லை.
    பிளாஸ்டிக் அரிசி என்பது வெறும் வதந்திதான் என்பதை ‘கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆப் இந்தியா’ அமைப்பு உறுதி செய்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி என்பது எந்த லாஜிக்கும் இல்லாத வெற்று வதந்திதான். பிளாஸ்டிக்கால் அரிசியைத் தயார் செய்ய முடியும் என்பதற்கு எந்த அறிவுப்பூர்வமான காரணமும் இல்லை. பொருளாதார ரீதியான காரணமும் இல்லை. உதாரணத்துக்கு, ஒரு கிலோ அரிசியின் விலை 50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதுவே ஒரு கிலோ பிளாஸ்டிக்கின் விலை 100 ரூபாய்.

    யாராவது 100 ரூபாய் செலவு செய்து 50 ரூபாய்க்கு அரிசி தயார் செய்து பாதிக்குப் பாதி நஷ்டமடைய விரும்புவார்களா? அப்படியே பிளாஸ்டிக்கால் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தயார் செய்கிறார்கள் என்று சொன்னாலும் அரிசியைப் பார்த்த உடனேயோ, சமைக்கும்போதோ தெரியாமல் போய்விடுமா? இதன் பின்னணியில் ஒரே ஒரு வாய்ப்பு வேண்டுமானால் இருக்கிறது.

    தரமில்லாத அரிசியில் தயாரானால் சாதம் பிளாஸ்டிக் போல தோற்றமளிக்க வாய்ப்பு இருக்கிறது. இயல்புக்கு மாறான மணம் வீச வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, ஸ்டார்ச் உணவுப்பொருளான கிழங்கு போன்ற மாற்று உணவுப்பொருளில் இருந்து அரிசி போல தயாரித்து கலப்படம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதைப் போல, பக்கெட் தயாரிக்கும் பிளாஸ்டிக் கொண்டு அரிசி தயாராகிறது, அது விற்பனைக்கு வருகிறது என்ற குழந்தைத்தனமான பொய்யை எல்லாம் மக்கள் நம்ப வேண்டியதில்லை.



    உணவின் தரம் குறைவாக ஒருவேளை வாய்ப்பு இருக்கிறதே தவிர, பிளாஸ்டிக் அரிசியாக இருக்க வாய்ப்பே இல்லை. காரணம், இதுவரை நம் நாட்டில் எங்குமே பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை. இது வெறும் வதந்திதான். எனவே, பொதுமக்கள் இதுபற்றி பீதி அடையத் தேவையில்லை.

    முன்பு இதுபோலத்தான் முட்டை பிளாஸ்டிக்கில் வருகிறது என்று கூறினார்கள். சீதோஷ்ண நிலை மாறி கெட்டுப் போன முட்டை பிளாஸ்டிக் போல சற்று தோற்றமளிக்கும் என்பதை வைத்து அப்படி வதந்தி பரவியது. கொஞ்சம் நடைமுறையில் யோசித்துப் பாருங்கள்.முட்டையின் மஞ்சள் கருவை செயற்கையாகத் தயாரித்து, அதன் மேல் வெள்ளைக்கருவை செயற்கையாகத் தயாரித்து, அதற்கு மேல் வெள்ளை ஓட்டையும் பிளாஸ்டிக்கால் தயார் செய்து மூட வேண்டும் என்றால் ஒரு முட்டை தயாரிப்புக்கு மட்டும் எத்தனை ரூபாய் செலவாகும்?

    அப்படியே வெளிநாட்டில் தயாரானாலும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலா நாம் இருக்கிறோம்? வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்யும் வகையில் நாம் அபாரமான வளர்ச்சியோடு இருக்கிறோம். எனவே, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்பதை எல்லாம் மக்கள் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்று கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.

    Next Story
    ×