search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை
    X

    காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை

    காலை உணவில் வைட்டமின், மினரல்ஸ், கார்ப்போஹைட்ரேட்ஸ் இருக்கவேண்டும். டிபன், சாப்பாடு, பழங்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
    காலை உணவு மிக முக்கியம் என்கிறது மருத்துவம். காலை உணவில் வைட்டமின், மினரல்ஸ், கார்ப்போஹைட்ரேட்ஸ் இருக்கவேண்டும். டிபன், சாப்பாடு, பழங்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். இட்லி சாலச்சிறந்தது. அதில் சேர்க்கப்படும் அரிசி, உளுந்து ஆகியவற்றில் உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

    அதனுடன் தொட்டுச்சாப்பிட சாம்பார், புதினா, கொத்தமல்லி, தக்காளி சட்னி போன்றவை இன்னும் சிறப்பாக இருக்கும். ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடுவதும் நல்லது. எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும். காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேக வைத்து சாப்பிடலாம்.



    நீரிழிவு நோயாளிகளின் உடலிலுள்ள அதிகபட்ச நீர்ச்சத்தினை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்சை எல்லோரும் அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறு. அதற்குப்பதில் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவம் சொல்கிறது. சத்துகள் நீக்கப்பட்ட கார்ன்ப்ளேக்ஸ், கெடுதி தரும். பேக்கரி அயிட்டங்களைத் தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

    சாப்பிடுகிறேன் நேரமாச்சு‘ என அரைகுறையாக சில நிமிடங்களே சாப்பிடுபவர்கள் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினம் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். மருத்துவர்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.
    Next Story
    ×