search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
    X

    முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்

    இந்த ஆசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    முயல் அல்லது பிறைச்சந்திரத் தோற்றம். 'சசாங்க’ என்றால் பிறைச்சந்திரன். ஆனால், உண்மையில் இதன்பெயர் சசாகா (முயல்) ஆசனம் (நிலை) என்றும் நம்பப்படுகிறது. ஆசனத்தின் உச்சநிலையில் உடல் பிறைச்சந்திரன் அல்லது முயலைப் போன்றிருக்கும்.

    செய்முறை :

    விரிப்பில் நேராக உட்கார்ந்து கால்களை நேராக நீட்டவும். பாதங்கள் இணைந்த நிலையில், உள்ளங்கையைத் தொடைக்கு பக்கவாட்டில் ஊன்றவும். வலது காலை மெதுவாக மடக்கி, தொடைக்கு அடியில் இறுக்கமாக வைக்கவும். இடது காலை மடக்கி, இடது தொடைக்கு அடியில் வைக்கவும். முழங்கால்கள் ஒன்றோடொன்று இணைந்து இருக்கட்டும்.

    முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும். முதுகுக்குப் பின்புறம் வலதுகையை வைத்து வலது மணிக்கட்டை இடது கையினால் பிடிக்கவும். மூச்சை வெளியே விட்டுக்கொண்டே இடுப்பிலிருந்து முன்னுக்குக் குனிந்து நெற்றி தரையைத் தொடுமாறு வைக்கவும்.



    மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே மெதுவாகத் தலையையும் மார்பையும் நிமிர்த்தவும். கைகளை விடுவித்து உள்ளங்கைகளைத் தொடையின் மீது வைக்கவும். இடது காலை விடுவித்து நேராக நீட்டவும். வலது காலை விடுவித்து காலை நேராக நீட்டவும்.

    பலன்கள் :

    வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இடுப்பு மற்றும் முதுகின் அடிப்புறம் உள்ள நரம்புகள் உரம் பெறும். உடல் முழுவதும் தளர்வாக இருப்பதை நம்மால் உணர முடியும். முதுகின் நரம்புகள் வலுப்பெறுகின்றன.

    எச்சரிக்கை: இடுப்பில் வாயுப் பிடிப்பு உள்ளவர்கள், கழுத்து வலி உள்ள‌வர்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டாம்.
    Next Story
    ×