search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நிகழ்ச்சி
    X

    எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நிகழ்ச்சி

    சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சிறப்பு வாய்ந்த பேட்டை துள்ளல் நிகழ்ச்சி, எருமேலியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
    சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு ஐயப்ப பக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பேட்டை துள்ளல் நிகழ்ச்சி, எருமேலியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சமம் என்ற நிலையில், சிறியவர்- பெரியவர், ஏழை- பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி தங்கள் முகம், உடல் மீது வண்ண வண்ண பொடிகளை பூசி, இலை-தழைகளை கையில் ஏந்தியவாறு ஐயப்பனின் சரண கோஷத்தை பாடியவாறு ஆடிப்பாடி, எருமேலி கொச்சம்பலத்தில் இருந்து செல்வார்கள்.

    இவ்வாறு அம்பலப்புழை, ஆலங்கோடு பக்தர் குழுவினர் பெருவழி பாதை வழியாக 2 நாட்கள் நடந்து சென்று வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) பெரியானை வட்டம் வழியாக பம்பையை அடைந்து, ஆற்றங்கரையில் முகாமிடுவார்கள். பம்பையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான பம்பை விருந்து மற்றும் பம்பை விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். பின்னர் அவர்கள் சபரிமலை சன்னிதானம் சென்று சுவாமியை வழிபடுகிறார்கள்.
    Next Story
    ×