search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனுமனுக்கு வெற்றிலை மாலை வழிபாடு ஏன்?
    X

    அனுமனுக்கு வெற்றிலை மாலை வழிபாடு ஏன்?

    வெற்றிலை மாலையை சூட்டி அனுமனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும், தடைபட்டு வந்த காரியங்கள் முடிவுறும்.
    சீதை இலங்கையில்தான் இருக்கிறாரா என்பதைப் பார்த்து வருவதற்காக, அனுமனை இலங்கைக்கு அனுப்பினார் ராமன். அவரும் இலங்கை வந்து அங்குள்ள அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். 

    அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த சீதையை, ‘ராமர் விரைவில் வந்து உங்களை மீட்பார்’ என்று நல்வார்த்தைச் சொன்னார் அனுமன். அவரது வார்த்தையைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை, அருகில் இருந்து வெற்றிலையை பறித்து, அனுமனின் தலையில் வைத்து ‘சிரஞ்சீவியாக இருப்பாயாக’ என்று ஆசீர்வதித்தார். 

    இதை நினைவுகூரும் விதத்தில் தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது. வெற்றிலை மாலையை சூட்டி அனுமனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும், தடைபட்டு வந்த காரியங்கள் முடிவுறும். இன்னல் தந்த காரியங்கள் விலகும்.
    Next Story
    ×