search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.
    விராலிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருணகிரி நாதருக்கு முருகன் காட்சியளித்த இடம் என் பதால், ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவின் 6-வது நாள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 7-வது நாள் திருக் கல்யாணமும் நடை பெறுவது வழக்கம். இதைப் போல இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கொடி யேற்றதுடன் தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து கந்தசஷ்டி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை யொட்டி மலைமீது உள்ள முருகனுக்கு சிறப்பு வழி பாடுகள் நடைபெற உள்ளது. பின்னர் கொடி கம்பத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு கொடி யேற்றப்பட உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளார்கள்.

    முதல்நாளில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டு, மயில் வாகனத்தில் கிரிவலம் நடை பெற உள்ளது. தொடர்ந்து விழாநாட்களில் பல்வேறு வாகனத்தில் கிரிவலம் நடை பெறும். விழாவின் முக்கிய நாளான வருகிற 25-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. தொடர்ந்து 26-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×