search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.)
    X
    சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.)

    மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

    திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும், மற்ற தினங்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

    மேலும் தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினம், ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், மாதந்தோறும் பவுர்ணமி தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு பூஜையையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலை மோதியது. மதியம் நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் பத்ரகாளியம்மன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அடைக்கலம் காத்த அய்யனாருக்கும் பூஜை செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சுலபமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர், அறங்காவல் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×