search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிள்ளை வரம் அருளும் வளையல் பிரசாதம்
    X

    பிள்ளை வரம் அருளும் வளையல் பிரசாதம்

    ஆண்டாளின் அவதார திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
    ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். ஆடிப்பூர திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

    ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங் களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும்; பிள்ளை இல் லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கர்ப்பமான பெண்களுக்கு வளைக் காப்பு செய்வது வழக்கமல்லவா? அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும். அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாகலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் இணையும் நாள் ஆகும். வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.

    கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித (உடல் - மனம்) கஷ்டங்களும் உண்டாகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். இந்த ஆடிப்பூர தினத்தில்தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து தன் மக்கள் அனைவருக்கும் அருள்பாலிப்பாள்.
    அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் அற்புதமான பலன்களை வாரி வழங்க கூடியது. ஆனந்தத்தை வழங்கக் கூடியது. வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

    நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். இப்படி முளைப்பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற் குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுகிறது.

    Next Story
    ×