search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா 14-ந்தேதி நடக்கிறது
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா 14-ந்தேதி நடக்கிறது

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கடைசி திங்கட்கிழமையையொட்டி புஷ்பாபிஷேக விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று மாலை நித்ய காரிய பூஜைகள் முடிந்த பின்னர் தட்சணாமூர்த்தி, கொன்றையடி, நீலகண்டவிநாயகர், கைலாசநாதர், தாணுமாலயன் சன்னதி உள்பட அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    இதில் கேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர பிச்சி, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, முல்லை, சம்பங்கி, அரளி, துளசி, தாமரை, பச்சை உள்பட அனைத்து வகை பூக்களும் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் தங்களால் இயன்ற பூக்களை கொடுத்து புஷ்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×