search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பயம், கவலை நீங்க சரபேஸ்வரர் 108 போற்றி
    X

    பயம், கவலை நீங்க சரபேஸ்வரர் 108 போற்றி

    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிவாலயங்களில் உள்ள சரபேஸ்வரர் முன்போ, வீட்டில் திருவிளக்கேற்றியோ இந்த போற்றியைச் சொன்னால் கவலை நீங்கும்.
    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் (மாலை 4.30-6) உங்கள் ஊர் சிவாலயங்களில் உள்ள சரபேஸ்வரர் முன்போ, வீட்டில் திருவிளக்கேற்றியோ இந்த போற்றியைச் சொன்னால் கவலை நீங்கும். தேவையற்ற பயம் விலகும். நினைத்த செயல்கள் வெற்றி தரும். வீடு, கட்டடப்பணிகள் தடையின்றி நடக்கும்.

    1. ஓம் விண்ணவா போற்றி
    2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி
    3. ஓம் திண்ணவா போற்றி
    4. ஓம் அணிமாமலர் பறவை அரசே போற்றி
    5. ஓம் ருத்ர அக்னியே போற்றி
    6. ஓம் மந்திரத் துதி தேவா போற்றி
    7. ஓம் மாமலை சக்தியே போற்றி
    8. ஓம் சர்வ வியாபியே போற்றி
    9. ஒம் சங்கரா போற்றி
    10. ஓம் காலனுக்கும் காலா போற்றி
    11. ஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
    12. ஓம் பிறவிபயம் அறுத்தவனே போற்றி
    13. ஓம் நிரந்தரமானவனே போற்றி
    14. ஓம் நியாயம் தருபவனே போற்றி
    15. ஓம் வீரபத்திரனே போற்றி
    16. ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி
    17. ஓம் மகாதேவா போற்றி
    18. ஓம் நரசிம்மரை குளிரவைத்தவா போற்றி
    19. ஓம் நான்மறை ஆனாய் போற்றி
    20. ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி
    21. ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி
    22. ஓம் மந்திரம் ஆள்பவனே போற்றி
    23. ஓம் கம்பத்தில் நிற்பவனே போற்றி
    24. ஓம் கோபக்கனலேபோற்றி
    25. ஓம் கூர்நகம் கொண்டவனே போற்றி
    26. ஓம் லிங்கப்பதியே போற்றி
    27. ஓம் ருத்ரதாண்டவா போற்றி
    28. ஓம் சத்திய துணையே போற்றி
    29. ஓம் சாந்தி அருள்பவனே போற்றி
    30. ஓம் சத்திய சாட்சியே போற்றி
    31. ஓம் சத்திய உருவே போற்றி
    32. ஓம் முத்தொழில் தலைவா போற்றி
    33. ஓம் புவனம் படைத்தாய் போற்றி
    34. ஓம் ஆட்டிப் படைப்பாய் போற்றி
    35. ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி
    36. ஒம் அம்ருத அரசே போற்றி
    37. ஓம் சித்தர் சிந்தை புகுந்தவனே போற்றி
    38. ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி
    39. ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி
    40. ஓம் சிந்தாமணியின் ஜீவனே போற்றி
    41. ஓம் சித்தாந்த சித்தனே போற்றி
    42. ஓம் பரமாத்மனே போற்றி
    43. ஓம் பரப்பிரம்மனே போற்றி
    44. ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி
    45. ஓம் கைலாசவாசா போற்றி
    46. ஓம் திருபுவனேசா போற்றி
    47. ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி
    48. ஓம் நம்பினோர் நலம் அருள்வாய் போற்றி
    49. ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி
    50. ஓம் சூன்யம் அழிப்பாய் போற்றி
    51. ஓம் கொடுமை தீர்ப்பாய் போற்றி
    52. ஓம் எண்ணியது அருள்வாய் போற்றி
    53. ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
    54. ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி
    55. ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
    56. ஓம் திருவருள் தருவாய் போற்றி
    57. ஓம் வழித்துணையே போற்றி
    58. ஓம் எட்டு திசையும் காப்பாய் போற்றி
    59. ஓம் நஞ்சை புஞ்சை காப்பாய் போற்றி
    60. ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி
    61. ஓம் நமசிவாய திருவே போற்றி
    62. ஓம் சிவ சூரியா போற்றி
    63. ஓம் சிவச்சுடரே போற்றி
    64. ஓம் அட்சர காரணனே போற்றி
    65. ஓம் ஆதி சிவனே போற்றி
    66. ஓம் கால பைரவரே போற்றி
    67. ஓம் திகம்பரா போற்றி
    68. ஓம் ஆனந்தா போற்றி
    69. ஓம் காலத்தின் வடிவே போற்றி
    70. ஓம் காற்றாய் வருவாய் போற்றி
    71. ஓம் கர்ப்பம் காப்பவனே போற்றி
    72. ஓம் காத்து கருப்பு அழிப்பாய் போற்றி
    73. ஓம் எல்லையில்லா பொருளே போற்றி
    74. ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்தவனே போற்றி
    75. ஓம் வல்லார் வாழ்த்தும் தேவா போற்றி
    76. ஓம் எல்லாமாய் இருப்பவனே போற்றி
    77. ஓம் மூல குருவே போற்றி
    78. ஓம் தெவிட்டா தேனே போற்றி
    79. ஓம் விளக்கு தீபத்தில் ஒளிர்பவனே போற்றி
    80. ஓம் அமரர் படை தலைவா போற்றி
    81. ஓம் மான் வைத்தாய் போற்றி
    82. ஓம் மழு தூக்கி சிறந்தாய் போற்றி
    83. ஓம் அழைத்ததும் வருவோனே போற்றி
    84. ஓம் சூலினித்தாயின் சுகத்தோனே போற்றி
    85. ஓம் பிரத்யங்கிரா பிராணநாதா போற்றி
    86. ஓம் அம்பலத்தாடும் அரசே போற்றி
    87. ஓம் நகமே ஆயுதமாய் கொண்டாய் போற்றி
    88. ஓம் நலம் தரும் தெய்வமே போற்றி
    89. ஓம் உள்ளத்தில் உறைவாய் போற்றி
    90. ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி
    91. ஓம் திருவுக்கும் திருவான தெய்வமே போற்றி
    92. ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி
    93. ஓம் வேதம் தொழும் வேங்கையே போற்றி
    94. ஓம் வெற்றியை நாடுவோர் உள்ளமே போற்றி
    95. ஓம் நோய் தீர்க்கும் நெடியாய் போற்றி
    96. ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
    97. ஓம் மூவர்க்கு முந்திய முதல்வா போற்றி
    98. ஓம் முற்றும் துறந்தோர்க்கும் அருள்வாய் போற்றி
    99. ஓம் முக்திக்கு வழி செய்வாய் போற்றி
    100. ஓம் பயம் தீர்க்கும் பரம்பொருளே போற்றி
    101. ஓம் பக்தர் தன் துயர்நீக்கும் ஒளியே போற்றி
    102. ஓம் முக்தர்கள் ஜீவனே போற்றி
    103. ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
    104. ஓம் அடியார்க்கு அடியவா போற்றி
    105. ஓம் அருட்பெருஞ்ஜோதி அண்ணலே போற்றி
    106. ஓம் வெள்ளிக்கு வாழ்வு தந்தாய் போற்றி
    107. ஓம் குருவுக்கு உரு தந்த உயர்ந்தவா போற்றி
    108. ஓம் பூரண சரபேசா போற்றி! போற்றி!
    Next Story
    ×