search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆயிரத்தம்மனுக்கு ராகு கால விரத வழிபாடு
    X

    ஆயிரத்தம்மனுக்கு ராகு கால விரத வழிபாடு

    ‘ஆயிரத்தம்மன்’ கோவிலில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். ஆயிரம் கண் உடையவள் என்பதால் இந்த அம்மன் ‘ஆயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

    இந்தக் கோவிலில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில், இத்தலத்து அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

    தீராத நோய் உள்ளவர்கள் விரதமிருந்து ராகு காலத்தில் மாதுளை பழத்தோலில் நெய் விளக்கு ஏற்றி 41 நாட்கள் வழிபட்டால், நோய் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை உள்ளது. அதேபோன்று இந்த அம்மனை மனதார வேண்டினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் தனிச்சிறப்பாகும்.

    திருமணம் ஆகாத பெண்கள், படித்து வேலையில்லாமல் திண்டாடுவோர், பல்வேறு குடும்ப பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்கள் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தெய்வநாயகியாக திகழ்ந்து நிற்பவள் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.
    Next Story
    ×