ஐபோன் பயனர்களுக்கு நிம்மதி... வாட்ஸ்அப் கொண்டுவரும் புது மாற்றம்!

டிரைவ் அல்லாத கிளவுட் தளத்தில் சேமிக்கும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
ஐபோன் பயனர்களுக்கு நிம்மதி... வாட்ஸ்அப் கொண்டுவரும் புது மாற்றம்!
Published on

ஐகிளவுட் ஸ்டோரேஜ் பற்றாக்குறை காரணமாக வாட்ஸ்அப் சாட் பேக்கப் செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றீர்களா? உங்களுக்காகவே வாட்ஸ்அப் பிரத்யேக சேவையை உருவாக்கி வருகிறது. அதன்படிஆப்பிள் ஐகிளவுட் சேவைக்கு மாற்றாக ஐபோன் பயனர்கள் தங்களது சாட்களை பேக்கப் செய்ய சொந்த கிளவுட் சேவையை உருவாக்கி வருகிறது.

WABetainfo மூலம் வெளியாகி இருக்கும் இந்த அம்சம் தற்போது ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த அம்சம் பயனர்கள் எண்ணற்ற ஐகிளவுட் ஸ்டோரேஜை சேமிக்க செய்வதோடு, முழுமையான என்க்ரிப்ஷன் வசதியையும் வழங்குகிறது.

இதேபோன்ற அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், ஐ.ஓ.எஸ். வெர்ஷனிலும் வழங்கப்பட இருக்கிறது. ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சாட்களை கூகுள் டிரைவ் அல்லாத கிளவுட் தளத்தில் சேமிக்கும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

எப்படி இயங்கும்?

வாட்ஸ்அப் தனது பயனர்கள் சாட்களை ஐகிளவுட் அல்லது வாட்ஸ்அப்-இன் சொந்த சர்வர்களில் பேக்கப் செய்ய வேண்டுமா என இரு ஆப்ஷன்களை காண்பிக்கும். இதில் ஐகிளவுட் டீஃபால்ட் ஆப்ஷனாக இருக்கும். பயனர்கள் இதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.

ஐகிளவுட் பேக்கப்களில் பயனர்கள் தாங்களாகவே என்க்ரிப்ஷன் அம்சத்தை செயல்படுத்த வேண்டிய சூழலில், வாட்ஸ்அப் சர்வர்களில் பேக்கப் செய்யும் போது, இது தானாகவே செயல்படுத்தப்பட்டு இருக்கும். பயனர்கள் இதனை பாஸ்கீ, பாஸ்வொர்டு அல்லது 64-இலக்க என்க்ரிப்ஷன் கீ மூலம் பாதுகாக்க முடியும்.

ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்:

முதற்கட்டமாக வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு 2 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்க இருக்கிறது. அதன்பிறகு 50 ஜிபி ஸ்டோரேஜ் பெற பயனர்கள் மாதம் 0.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 95 வரை செலுத்த வேண்டியிருக்கும்.

தற்போது இந்த அம்சம் உருவாக்கப்பட்டு இருக்கும் நிலையில், இது அனைவருக்குமான வெர்ஷனில் கிடைக்க மேலும், சில காலம் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com