ஸ்மார்ட்போன் விலையை எட்டே நாட்களில் ரூ. 8,000 உயர்த்திய சாம்சங்

தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஸ்மார்ட்போன் விலையை எட்டே நாட்களில் ரூ. 8,000 உயர்த்திய சாம்சங்
Published on

சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன்கள் விலை தினந்தோரும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது மாடல்களின் விலையை உயர்த்தி வருகின்றன.

அந்த வரிசையில் சாம்சங் தற்போது தனது ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியுள்ளது. அதுவும், இந்த ஸ்மார்ட்போன் வெளியான எட்டே நாட்களில் அதன் விலையை உயர்த்தியுள்ளது.

கடந்த ஜூலை 04-ஆம் தேதி சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி M47 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 25,999 விலையில் அறிமுகம் செய்தது. மேலும், தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

விலை உயர்வு:

இந்த நிலையில், புதிய கேக்ஸி M47 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7,000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 32,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பேஸ் வேரியண்ட் போன்றே இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 25,999-இல் இருந்து ரூ. 36,999 என மாறியிருக்கிறது. டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999-இல் இருந்து ரூ. 41,999 என உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சாம்சங் மட்டுமின்றி நத்திங், ரியல்மி மற்றும் சியோமி என பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தி வருகின்றன. தொடர்ந்து அதிகரிக்கும் செலவீனஙகள் காரணமாகவே விலை உயர்த்தப்படுவதாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com