Netflix | புதிய பயனர்களுக்கு 30 நாட்களுக்கு free trial

இந்த சலுகை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
Netflix 30-day Free Trial
Published on

நெட்ஃபிளிக்ஸ் இலவச சோதனை:

நெட்ஃபிளிக்ஸ் தற்போது ​​தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில், தனது புதிய பயனர்களுக்கு இலவச சோதனைகளை(Free trials) மீண்டும் கொண்டுவருவதை சோதனை செய்து வருகிறது.

இவை, பயனரைப் பொறுத்து 7 முதல் 30 நாட்கள் வரை கால அளவில் மாறுபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் ஒரு மறைநிலை உலாவியில் (incognito browser) அணுக முயற்சித்தாலோ அல்லது முன்பே குக்கீஸ்களை(cookies) அழித்தாலோ, இந்த இலவச சேவை முழு 30 நாட்களும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சலுகை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்தச் சோதனைக் காலத்தில் பயனர்கள், அவர்கள் விரும்பும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

மேலும், சோதனைக் காலத்தின் முடிவில் அதற்கான கட்டணம் தானாகவே வசூலிக்கப்படும். எனவே, 4K HDR ஸ்ட்ரீமிங்கை உள்ளடக்கிய மிகவும் விலையுயர்ந்த பிரீமியம் திட்டத்தைக்கூட நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com