

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதா இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.
புதிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் ஜூலை 22-ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கும் நிலையில், இவற்றின் விலை விவரங்கள் தற்போது லீக் ஆகியுள்ளன.
விலை விவரங்கள்:
கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மாடலின் விலை 2,000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,90,800-ஐ விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் மட்டுமின்றி சாம்சங் நிறுவனம் சற்றே அகலமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஜெமினி இன்டெலிஜன்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
$100 அதிகம்:
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து எஸ்.இ. டெய்லி வெளியிட்டுள்ள தகவல்களில் அமெரிக்க சந்தையில் இவற்றின் விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மாடலின் 256 ஜிபி மெமரி வெர்ஷன் 2,099 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,00,300 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த விலை உண்மையாகும் பட்சத்தில் இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி Z ஃபோல்டு 7 மாடலை விட சரியாக 100 டாலர்கள் வரை அதிகம் ஆகும். இந்த முறை உற்பத்தி செலவீனங்கள் உயர்வு காரணமாக சாதனத்தின் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெமினி இன்டெலிஜன்ஸ்:
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மற்றும் அகலமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒன் யுஐ 9 மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி இன்டெலிஜன்ஸ் கொண்ட முதல் ஸ்மா்ட்போன்களாக இருக்கும்.
முந்தைய தகவல்களில் கேலக்ஸி Z ஃபோல்டு 8 மமாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர், 4800mAh பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டது.
இத்துடன் இரட்டை 50MP பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மாடலில் 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படலாம்.