8000mAh பேட்டரியுடன் புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 2 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும்.
8000mAh பேட்டரியுடன் புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி
Published on

ரியல்மி நிறுவனம் நார்சோ சீரிசில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. நார்ச 100X 5ஜி என்ற பெயரில் உருவாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய நார்சோ ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் மற்றும் நீண்ட நேர பேட்டரி லைஃப் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரி:

மிட் ரேஞ்ச் பிரிவில் நிலைநிறுத்தப்படும் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் கவனிக்கத்தக்க ஹார்டுவேர் அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது.

தற்போதைய டீசர்களில் புதிய நார்சோ 100X 5ஜி ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 2 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும்.

இத்துடன் நான்கு ஆண்டுகள் பயன்பாட்டிற்கு பிறகும் இதில் வழங்கப்படும் பேட்டரி ஆயுள் 80% வரை இருக்கும். அளவில் பெரிய பேட்டரியுடன் 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இதர சாதனங்ளை சார்ஜ் செய்ய அனுமதிக்கும்.

சிப்செட்:

நார்சோ 100X 5ஜி ஸ்மார்ட்போன் 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் 6300 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.72 இன்ச் 120 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இத்துடன் பல்வேறு அளவுகளில் ரிப்ரெஷ் ரேட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. பயனர்கள் 120Hz, 90Hz, 60Hz, 50Hz, 48Hz மற்றும் 45Hz வரையிலான அளவுகளில் செட் செய்யலாம்.

இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 50MP பிரைமரி கேமராவுடன் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனிில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com