என்ட்ரி லெவல் அம்சங்கள், மிகக்குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
என்ட்ரி லெவல் அம்சங்கள், மிகக்குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய யுவா 4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய லாவா யுவா 4 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கும் லாவா யுவா 4 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வழங்குவதாக லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எப்எம் ரேடியோ, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் கிளாஸி வைட், கிளாஸி பர்ப்பில் மற்றும் கிளாஸி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com