என் மலர்
நீங்கள் தேடியது "பரூக் அப்துல்லா"
- ஜம்முவில் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
- இதில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
ஜம்மு:
தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த பி.எஸ்.சவுகானின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜம்முவில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, துணை முதல் மந்திரி சுரீந்தர் சவுத்ரி கலந்து கொண்டனர்.
அவர்கள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே நடந்து வந்தபோது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் பரூக் அப்துல்லாவை சுட்டார்.
இதைக்கண்ட பாதுகாப்பு படை வீரர் அந்த நபரை கீழே தள்ளி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதில் அப்துல்லா மயிரிழையில் உயிர் தப்பினார்.
அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஜம்முவை சேர்ந்த கமல் சிங் ஜாம்வால் என்பதும், கடந்த 20 ஆண்டாக பரூக் அப்துல்லாவை கொல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.
பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு பற்றி பரூக் அப்துல்லா கூறுகையில், நான் நலமுடன் இருக்கிறேன். கடவுள் என்னைக் காப்பாற்றி விட்டார் என உருக்கமாகத் தெரிவித்தார்.
- அப்துல்லாவை நேரடியாகச் சுட முயன்றார்.
- அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பினார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, ஜம்முவில் ஒரு "கொலை முயற்சியில்" இருந்து உயிர் தப்பினார். அதே விழாவுக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அப்துல்லாவை நேரடியாகச் சுட முயன்றார்.
தாக்குதல் நடத்தியவர் ஜம்மு காஷ்மீர் தலைவருக்கு சில அடிகள் மட்டுமே பின்னால் இருந்தார், அவரது கை தோள்பட்டைக்கு இணையாக இருந்தது. சட்டென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அந்த நபர் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார், ஆனால் தேசிய பாதுகாப்பு படை (NDG) கமாண்டோக்கள் அவரை கீழே தள்ளினர். இதனால் தோட்டா அதன் இலக்கைத் தவறியது, அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பினார்.
இந்த பரபரப்பு சம்பவங்கள் வீடியோவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர் கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், அவரை மடக்கிப்பிடித்த தேசிய பாதுகாப்பு படையினர் உடனடியாக கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெளியான காணொளிகளில் அவர் பிடிபட்ட உடனேயே மக்கள் அவரைத் தாக்குவதைக் காட்டியது.
கைது செய்யப்பட்ட பிறகு, தாக்குதல் நடத்தியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து, ஜம்முவில் உள்ள புராணாஸ் மண்டியில் வசிப்பதாக போலீசாரிடம் கூறினார். 65 வயதான தாக்குதல் நடத்தியவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், கடந்த 20 ஆண்டுகளாக இந்த தருணத்திற்காக தான் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கு நிலையில் இது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை கைது செய்தனர்.
- துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. இவர் துணை முதல் மந்திரி சுரேந்தர் சவுத்ரியுடன் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் பரூக் அப்துல்லா பத்திரமாக தப்பினார். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை கைது செய்தனர். அவர் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரூக் அப்துல்லாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் இந்தச் சம்பவம் நடந்திருப்பது கவலை அளிக்கிறது எனப்பதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இது முழுக்க முழுக்க வரும் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் அரசியல் தந்திரம்.
- இத்தகைய போக்கு தொடர்ந்தால் இந்தியா என்ற தேசமே ஆபத்துக்குள்ளாகும்.
தேர்தல் லாபத்திற்காக நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வேண்டுமென்றே பிரிவினை உருவாக்கப்படுவதாக பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் முக்கியத் தலைவர் பரூக் அப்துல்லா, "நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியும் பிரிவினையும் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது.
இது முழுக்க முழுக்க வரும் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் அரசியல் தந்திரம்.
மக்களை மதம் மற்றும் ஜாதியின் பெயரால் பிரிப்பது இந்தியாவை வலுவிழக்கச் செய்யும். இத்தகைய போக்கு தொடர்ந்தால் இந்தியா என்ற தேசமே ஆபத்துக்குள்ளாகும்.
இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும்
சில திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தவறாகச் சித்தரிப்பதன் மூலம் மக்களிடையே வெறுப்பை விதைத்து நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றன" என்று தெரிவித்தார்.
- காஷ்மீரின் உரிமைகளுக்காக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.
- பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
காஷ்மீரின் உரிமைகளும் தன்னாட்சியும் சிதைக்கப்பட்டு வருவதற்கு எதிரான காஷ்மீரின் குரலின் அடையாளமாக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- என்கவுண்டர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது என்று உங்களால் எப்படி கூற இயலும்.
- பாகிஸ்தான் உடனான உறவு மேம்படும் வரை பயங்கரவாதம் ஓயாது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும் வரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் ஓயாது என தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், குல்காம் மாவட்டத்தில் என்கவுண்டர் நடைபெற்று வருவது குறித்து கேட்ட கேள்விக்கு "என்கவுண்டர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது என்று உங்களால் எப்படி கூற இயலும்" என்றார்.
- அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம்.
- காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் அங்கு செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் அமைதி நிலவி வருவதாகவும், சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூப் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தியை நாட்டுக்கு மக்களுக்கு அனுப்பும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம். காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீருக்கு ஏற்பட்ட சேதத்தை அமைதியான அமர்நாத் யாத்திரை மூலம் குறைக்க முடியும்.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
பாபா நக்ரியில் நடந்த வருடாந்திர ஊர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நாட்டில் அமைதி நிலவவும், நமது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கவும், நாம் கடந்து செல்லும் வெறுப்புச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
- பஹல்காமில் அச்சம் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது, அது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக உணர்கிறேன்.
- எவ்வளவு மக்கள் பஹம்காமிற்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் முகாம்களை முப்படைகளும் இணைந்து துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க போர் பதற்றம் நிலவியது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரில் அச்சம் சூழ்நிலை குறைந்துள்ளது என தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
பஹல்காமில் நடந்தது மிகவும் வருந்தம் அளிக்கிறது. அச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது. மக்கள் இங்கு மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்க வேலைகளைக் கேட்கவில்லை. பஹல்காமில் அறைகள் கிடைக்கவில்லை. இதுதான் பஹல்காம் சூழ்நிலையாக உள்ளது.
பஹல்காமில் அச்சம் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது, அது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக உணர்கிறேன். எவ்வளவு மக்கள் பஹம்காமிற்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். நான் குல்மார்க்கில் இருந்தேன், 400-500 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
பரூக் அப்துல்லா தனத நண்பர்களுடன் பஹல்காமிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டி இல்லை என்று உமர் அப்துல்லா அறிவிப்பு.
ஸ்ரீநகர் :
காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேசிய மாநாட்டுக்கட்சி நியமித்து வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, பொறுப்பாளர் நியமனம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன் என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார்' என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இந்த முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவரது தந்தையும், கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லாவும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தலுக்காக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, 'தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்று பதிலளித்தார்.
- தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
- இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என பரூக் அப்துல்லா தகவல்
ஸ்ரீநகர்:
நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்கும் நேரம் இது. கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இது ஒரு ஜனநாயக நடைமுறை' என்றார்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலராகப் பொறுப்பேற்பார் என்றும், தற்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
- ஜனநாயகமும் அரசியலமைப்பும் அச்சுறுத்தப்படுவதாக பரூக் அப்துல்லா பேச்சு
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசும்போது, 'நீங்கள் தமிழகத்திற்கு மட்டும் சேவை செய்யாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்வதற்காக நீண்ட காலம் வாழ்வீர்கள். இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. ஜனநாயகமும் அரசியலமைப்பும் அச்சுறுத்தப்படுகிறது. விழித்துக்கொள்வோம்' என்றார்.
முன்னதாக சென்னை வந்து இறங்கியதும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 2024 தேர்தல் குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, ``நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறும்போது, இந்த தேசத்தை வழிநடத்தி ஒன்றிணைக்க சிறந்த மனிதர் யார் என்பதை முடிவுசெய்வார்கள்" என்றார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, ``ஏன் முடியாது... ஏன் அவரால் பிரதமராக முடியாது... அதில் என்ன தவறு?" என்றார்.
- 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
- காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது.
ஜம்மு :
அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றன.
இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நிதிஷ் குமாரின் இந்த கூட்டணி முயற்சி வெற்றி பெறுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமை உருவாகுமா? என்பதை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு எதுவும் இல்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள், நல்ல உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறோம்.
காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிகள் உணர்வார்கள் என நம்புகிறேன். ஜனநாயகத்தை பாதுகாக்க அவர்கள் இணைந்து பாடுபடுவார்கள்.
காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது. ஏனெனில் அவர்கள் (பா.ஜனதா) ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டார்கள்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் நீங்கள் மக்களின் உரிமையை மறுக்கிறீர்கள்.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலோ அல்லது சட்டசபை தேர்தலோ, இவை எப்போது நடந்தாலும் அதில் போட்டியிட தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது.
எனினும் இங்கு ஏதோ நடக்கிறது, அதற்காக கடவுளுக்கு நன்றி. குறைந்தபட்சம் பஞ்சாயத்து தேர்தலாவது நடக்கும் என நினைக்கிறேன். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் எந்த தேர்தலையும் விடமாட்டோம்.
சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும் என்று கவலை இல்லை. அதை எப்போது நடத்துவது? என அவர்கள் முடிவு செய்யட்டும். நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.
இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.






