

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின், 70-வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 60 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா தரப்பில் துபே 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், அனுகுல் ராய், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து கொல்கத்தா அணி 204 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்துவருகிறது.