உலகக் கோப்பை கால்பந்து: மொராகோவை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் பிரான்ஸ் மற்றும் மொராகோ அணிகள் மோதின.
உலகக் கோப்பை கால்பந்து: மொராகோவை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது பிரான்ஸ்
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுப் போட்டியில் மொராகோவை 2-0 என வீழ்த்திய பிரான்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பெரும் பரபரப்புடன் தொடங்கிய காலிறுதி சுற்றில் கோல் கணக்கை தொடங்க இரு அணிகளும் தீவிரம் காட்டின.

ஆட்டத்தின் 28-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்ட, எம்பாப்பே கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் கண அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் பிரான்ஸ் வீரர் எம்.ஏ. டிசைர் டௌ அசிஸ்ட் செய்ய எம்பாப்பே 60-ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரு அணிகளும் வீரர்களை மாற்றி வந்த நிலையில், ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே அசிஸ்ட் செய்ய ஔஸ்மேன் டெம்பெலெ கோல் அடித்தார்.

முன்னிலை:

இதனால், பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து மொராகோ வீரர்கள் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.

எனினும், ஆட்டத்தின் இறுதிவரை அந்த அணியால் கோல் அடிக்கவில்லை. இதனால், பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com