பிபா உலக கோப்பையில் முடிவுக்கு வந்த மெஸ்சியின் அபார சாதனை..!

பிபா உலக கோப்பையில் தொடர்ந்த 9 போட்டிகளில் குறைந்தது ஒரு கோலாவது அடித்து சாதனைப் படைத்திருந்தார் மெஸ்சி.
மெஸ்சி
மெஸ்சி
Published on

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) சுவிட்சர்லாந்துக்கு எதிராக இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் தொடர்ச்சியாக உலக கோப்பை போட்டியிலும் கோல் அடித்து வந்த அவரது சாதனை முடிவுக்கு வந்தது.

கடந்த உலக கோப்பையில் மெஸ்சி 4 ஆட்டத்தில் தொடர்ச்சியாக கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் 5 ஆட்டத்தில் தொடர்ச்சியாக கோலை பதிவு செய்தார். சுவிட்சர்லாந்துக்கு எதிராக இன்றைய ஆட்டத்திலும் அவர் கோல் அடித்து சாதனையை நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது முடியாமல் போனது. அவர் இன்று பலமுறை கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டார். அவற்றை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் தடுத்துவிட்டார். கோல் அடிக்காவிட்டாலும் மெஸ்சி கோல் அடிக்க உதவினார். அவர் அடித்த கார்னர் ஷாட்டில்தான் முதல் கோல் விழுந்தது.

மெஸ்சி- எம்பாப்பே இடையே போட்டி

உலக கோப்பை போட்டியின் அதிக முறை கோல் அடிக்க உதவிய வீரராக மெஸ்சி இருக்கிறார். 10 கோல் அடிக்க அவர் உதவியாக இருந்துள்ளார். கால்பந்து ஜாம்பவான் மரடோனா 8 முறை கோல் அடிக்க உதவியாக இருந்ததை அவர் சமீபத்தில் முறியடித்தார்.

இந்த உலக கோப்பையில் மெஸ்சி 8 கோல்கள் அடித்து எம்பாப்வேயுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த உலக கோப்பையில் அவர் 21 கோல்கள் அடித்துள்ளார். எம்பாப்வே 20 கோல்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

நடுவருடன் மெஸ்சி வாக்குவாதம்

சுவிட்சர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியின்போது போர்ச்சுக்கல் நடுவர் பின்ஹெய்ராவிடம் நட்சத்திர வீரர் லியோனி மெஸ்சி வாக்குவாதம் செய்தார். பிரீ கிக்கின்போது பின்னே செல்லுமாறு அறிவுறுத்தியபோது மெஸ்சி அதிருப்தி அடைந்தார். ஆத்திரமடைந்த அவர் நடுவருடன் வாக்குவாதம் செய்தார். என்னை அவமானப்படுத்தாதீர்கள். என்னிடம் ஒழுங்காக பேசுங்கள். நான் உங்களிடம் ஒழுங்காக பேசினேன். இவ்வாறு மெஸ்சி நடுவரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com