

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதிில் இன்றைய ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மிகவும் பரபரப்பாக தொடங்கிய இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே கோல் கணக்கை தொடங்க முனைப்பு காட்டின. இதற்கு பலனளிக்கும் வகையில் ஆட்டத்தின் 30-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடுத்து கணக்கை தொடங்கியது.
சமநிலை:
ஸ்பயின் அணிக்கு ஃபேபியன் ரூயிஸ் கோல் அடித்து அசத்தினார். ஸ்பெயின் அணி கோல் கணக்கை தொடங்கியதும் ஆக்ரோஷமாக ஆடிய பெல்ஜியம் அணி சரியாக 41-ஆவது நிமடத்தில் டிமோத்தி கேஸ்டே சரியாக அசிஸ்ட் செய்ய அதனை பயன்படுத்திக் கொண்ட சார்லஸ் கெட்டிளிர் தனது அணிக்கு கோல் கணக்கை தொடங்கினார்.
ஆட்டத்தின் முதல் பாதி வரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதி வெற்றிக்கு தேவயான ஒரு கோலை எந்த அணி அடிக்கப்பகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. மறுபக்கம் இரு அணிகளும் தங்களு வீரர்களை மாற்றும் பணிகளை தீவிகரப்படுத்தினர்.
கூடுதல் நேரம்:
பிறகு ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கெல் மெரினோ தனது அணிக்கு கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதிவரை இந்த கோல் கணக்கில் மாற்றம் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டன. எனினும், இந்த சமயத்திலும் இரு அணி வீரர்களாலும் கோல் கணக்கை மாற்ற முடியவில்லை. இதனால், ஆட்டத்தின் இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.