இன்று நள்ளிரவு இறுதிப்போட்டி: ஸ்பெயின் சிறந்த அணி- அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி சொல்கிறார்

ஸ்கலோனி 2018-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் 4 முக்கிய கோப்பைகளை அர்ஜென்டினா கைப்பற்றியது.
Lionel Scaloni
லியனோல் ஸ்கலோனி
Published on

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிபா உலக கோப்பையின் இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நநடக்கிறது.

உலக கோப்பை யாருக்கு?

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். நடப்பு உலக சாம்பியனும், தென் அமெரிக்க சாம்பியனுமான அர்ஜென்டினாவும், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினும் இறுதி ஆட்டத்தில் மோதுவது முதல் தடவையாகும்.

அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் 7-வது முறை: ஸ்பெயின் 2-வது முறை

அர்ஜென்டினா 7-வது முறையாகவும், ஸ்பெயின் 2-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் அர்ஜென்டினா 3 தடவையும், ஸ்பெயின் ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அர்ஜென்டினா 4-வது உலக கோப்பைக்காகவும், ஸ்பெயின் 2-வது பட்டத்துக்காகவும் காத்திருக்கிறது.

இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் உலக கோப்பையை வெல்லப் போவது அர்ஜென்டினாவா? ஸ்பெயினா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் சிறந்த அணி

ஸ்பெயினுடன் மோதும் இறுதிப் போட்டி குறித்து அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்பெயின் ஒரு சிறந்த அணி. அவர்களை பற்றிய அனைத்தும் எனக்கு கவலை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம். அவ்வாறு வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் எப்படி இருந்தாலும் இறுதிப்போட்டிக்கான நிலையை அடைய நாங்கள் மேற்கொண்ட பயணம் நம்ப முடியாத அளவில் இருந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

69 வெற்றி

ஸ்கலோனி 2018-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் 4 முக்கிய கோப்பைகளை அர்ஜென்டினா கைப்பற்றியது. 2022 உலக கோப்பை மற்றும் 2 கோபா அமெரிக்க கோப்பையை (2021, 2024) வென்றது.

96 ஆட்டத்துக்கு பயிற்சி யாளராக இருந்து உள்ளார். இதில் அர்ஜென்டினா 69-ல் வெற்றி பெற்றது. வெற்றி சதவீதம் 71.88 ஆகும். 18 போட்டி ‘டிரா’ ஆனது. 9 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com