உலகக் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் மோதல்!

கோப்பையை வெல்ல அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் மோதல்!
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையல், வருகிற ஞாயிற்று கிழமை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

இறுதிப் போட்டி:

முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ்- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின, இதில் ஸ்பெயின் 2-0 என வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மூன்றாவது இடம்:

அதன்படி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுதவிர மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில்வெற்றி பெறும் அணி மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com