

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி பர்மிங்காமில் இன்று (ஜூலை 14) நடைபெற்று வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து 47.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 258 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்து அணியை மீட்டார். அவரோடு லியம் டாஸன் (68 ரன்கள்) இணைந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இந்திய தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா, துபே தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து இந்தியா 259 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.