

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில், 1-1 என்ற சமநிலையில் தொடர் உள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியவுக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குர்ணூர் ப்ரார், ப்ரின்ஷ் யாதவ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.