

பாகிஸ்தான் சூப்பர் லீக் வருகிற 26-ந்தேதி தொடங்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி நேற்று தெரிவித்தார். மேற்கு ஆசிய மோதல் (அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்) காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஆயுதமேந்திய குழுவான ஜமாத்-அல்-அரார் (Jamaat-ul-Ahrar) வெளிநாட்டு வீரர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
டேவிட் வார்னர் மற்றும் சுமித் ஆகியோர் தொடரில் இருந்து விலக வேண்டும். டி20 லீக்கில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டால் வீரர்களின் பாதுகாப்புக்கு உறுதி கிடையாது என அந்தக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா இங்கிலாந்தைச் சேர்ந்த மொயீன் அலி, நியூசிலாந்தை சேர்ந்த டேவன் கான்வே ஆகிய முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளார். அவர் பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.