கொல்கத்தாவிடம் தோல்வி - பீல்டிங் மோசமாக இருந்ததாக விராட் கோலி கருத்து

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது என்று தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். #IPL2018 #RCBvKKR
கொல்கத்தாவிடம் தோல்வி - பீல்டிங் மோசமாக இருந்ததாக விராட் கோலி கருத்து
Published on

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி கொல்கத்தாவிடம் மீண்டும் தோற்றது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் விளையாடியது. அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி 5-வது தோல்வியை தழுவியது. கொல்கத்தாவிடம் அந்த அணி மீண்டும் தோற்றது. இந்த தோல்வி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-


இந்த ஆடுகளம் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த பிட்சில் 175 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் என நினைத்தோம். ஆனால் கொஞ்சம் திரும்பி பார்த்தால் நாங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் இல்லை. நாங்கள் கடின முயற்சியை மேற்கொள்ளவில்லை. நாங்கள் இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.

அணியில் உள்ள 11 வீரர்கள் ஒன்றாக இணைந்து மைதானத்துக்குள் உற்சாகத்தை கொண்டுவர வேண்டும். எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இனி வரும் 7 போட்டிகளில் 6 ஆட்டத்தில் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு நுழைய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com