ஜோ ரூட் அபாரம்... 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
ஜோ ரூட் அபாரம்... 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
Published on

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிஃப்-இல் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா (26), சுப்மன் கில் (31) ரன்களை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணி ஆல்-அவுட்:

அடுத்து களமிறங்கியவர்களில் ஸ்ரேயஸ் அய்யர் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 44 ஓவர்கள் மிடிவில் 233 ரன்களில் ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் மற்றும் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் முகமது இரு விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ஜோ ரூட் அபாரம்:

234 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 99 ரன்களை குவிததார். இவர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், கேப்டன் ஹேரி ப்ரூக் 16 ரன்களும், சாம் கர்ரன் 26 ரன்களும், ஜோஸ் பட்லர் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 30 ரன்கள், கஸ் அட்கின்சன் 23 ரன்களும் குவித்தனர்.

இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 சமனாகியுள்ளது. இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 19-ஆம்தேதி நடைபெற இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com