

ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடிப் புண்ணியமும், கோலாகல வாழ்க்கையும் கிடைக்கும்.
* ஆடி மாதம் 13-ந் தேதி (29.7.2026) புதன் ஆடிப் பவுர்ணமி. அன்றைய தினம் கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும். மலைவலம் வந்தால் மகத்துவம் உண்டு.
* ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2026) திங்கட்கிழமை ஆடிப்பெருக்கு வருகிறது. அன்றைய தினம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
* ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2026) வெள்ளிக்கிழமை ஆடிக் கார்த்திகை. அன்றைய தினம் வள்ளி மணாளனை விரதம் இருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.
* ஆடி மாதம் 27-ந் தேதி (12.8.2026) புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய தினம் கடலில் நீராடுவதுடன், முன்னோர்களை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். இயன்றவர்கள் ஆறு மற்றும் கடல்களில் நீராடி ஆலய வழிபாடு செய்யலாம்.
* ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2026) வெள்ளிக்கிழமை ஆடி மாதப் பூரம் திருவிழாவருகிறது. ஆடிப்பூரம் அன்று அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் அமைதி கிடைக்கும். பொருளாதார நிலையும் உயரும்.
* ஆடி மாதம் 31-ந் தேதி (16.8.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று நாக சதுர்த்தி வருகின்றது. ராகு -கேது ஆதிக்கம் உள்ளவர்கள், அன்றைய தினம் நாகநாதர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.