2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

பிறரை நம்பி ஒப்படைத்த செயல்களால் விரோதம் உண்டாகும்.
weekly rasipalan
Published on

தனுசு

வேலைப் பளு கூடும் வாரம். ராசிக்கு சனி செவ்வாய் மற்றும் புதனின் பார்வை உள்ளது. புதிய முயற்சிகள், சிந்தனைகள் வெற்றி தரும். பணம் பல வழிகளில் வந்து சேரும். பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும். வீடு, நிலம், வாகனம் வாங்குதல், கால்நடை வாங்குதல் ஆகியவை ஏற்படும். சிலர் நீதி மன்ற வழக்கிற்கு அதிக பணம் செலவு செய்ய நேரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிக்க முயற்சிக்கலாம். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த செயல்களால் விரோதம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். முன் கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடவும்.

மகரம்

விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு குரு மற்றும் சூரியனின் பார்வை உள்ளது. படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும் வாரம். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். மதிப்பு மரியாதை, வெகு சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தித் தரலாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். முக்கிய வழக்குகளை ஒத்திவைக்கவும். பூர்வீகத்தை விட்டு தொழில், உத்தியோகத்திற்கு வெளியூர் சென்றவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள். சிலருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. அதீத வேலை பளுவினால் சோர்வு, உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம். ஆடி மாத செவ்வாய்க்கிழமை அம்மன் வழிபாடு செய்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

கும்பம்

எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் உள்ள ராகுவால் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீடுகளை அதிகரிக்க முடியும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகம், தொழில்ரீதியாக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் கிடைக்கும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 21.7.2026 அன்று காலை 7.54 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் தடை உண்டாகலாம். எதிர்மறை சிந்தனை மிகுதியாகும். பெரிய பணப் பரிவர்த்த னைகளை தவிர்க்கவும். குடும்பத்தினரின் அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். ஆடி செவ்வாய்க்கிழமையன்று இளநீர் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட வழிபட நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மீனம்

தெய்வ அனுகூலம் உண்டாகும் வாரம். மீன ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று சூரியனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இழுபறியாக இருந்த பணிகள் முடியும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். புதியபொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் மற்றும் குல தெய்வத்தின் நல்லாசிகள் நிரம்பப் பெறுவீர்கள். இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். சுயமுயற்சி, உழைப்பினால், திறமையால் தேவையானதை அடைவீர்கள். வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். 21.7.2026 அன்று காலை 7.54 முதல் 23.7.2026 இரவு 7.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும். மனதில் சிறு பயம், அச்சம், சந்தேகம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்கவும். ஆடி வெள்ளிக்கிழமை சந்தன அபிஷேகம் செய்த அம்மன் வழிபாடு செய்யவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com